Skip to main content
சிங்கப்பூர் தங்கமுனை விருது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தங்கமுனை விருது - 36 எழுத்தாளர்களுக்குப் பரிசு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் தங்கமுனை விருதுப் போட்டியில் 36 பேர் பரிசு பெற்றுள்ளனர்.

சிறுகதை, கவிதை, சிங்கப்பூர்ச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்தின் ஆதரவில் ஈராண்டுக்கு ஒருமுறை போட்டி நடத்தப்படுகிறது.

Arts House குழுமமும் சிங்கப்பூர்ப் புத்தக மன்றமும் அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளில் போட்டி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு முறையும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஏற்பாட்டுக் குழுவினர் சுட்டினர்.

தமிழில் கவிதைப் பிரிவில் நெ. ரெமிலா (N Remila) முதற்பரிசு பெறுகிறார்.

தமிழ்ச் சிறுகதைப் பிரிவில் சங்கப்பிள்ளை வாசுகி (Sangappillai Vasuki) முதலிடம் பிடித்தார்.

நான்கு மொழிப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் 9 ஆம் தேதி பரிசளிக்கப்படும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்