சிங்கப்பூரின் பயனீட்டாளர் விலைக் குறியீடு - மெதுவான வளர்ச்சி

(படம்: AFP/Roslan Rahman)
சிங்கப்பூரின் முக்கிய பயனீட்டாளர்க் குறியீடு கடந்த மாதம் மெதுவான வளர்ச்சியைக் கண்டது.
சில்லறை வர்த்தகப் பொருள்களின் விலையும்
மின்சார, தண்ணீர்க் கட்டணமும் கொஞ்சம் அதிகரித்தது அதற்குக் காரணம்.
ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டதைப்போல் கடந்த மாதம் 6.5 விழுக்காடு குறைந்தது.
குடியிருப்பு, தனியார்ப் போக்குவரத்துக் கட்டணம் தவிர்த்த அடிப்படைப் பணவீக்கம் மாற்றமின்றித் தொடர்ந்து 5.1 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு முழுமைக்கும் அடிப்படைப் பணவீக்கம் 4.1 விழுக்காடாகப் பதிவானது.
அது 2021ஆம் ஆண்டு பதிவான 0.9 விழுக்காட்டைவிட அதிகம்.