ஆசிய விளையாட்டுகள் - சிங்கப்பூரின் லோ கியன் யூவு முன்னேறினார்
CNA/Wallace Woon
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீரர் லோ கியன் யூ (Loh Kean Yew) ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னேறியுள்ளார்.
அவர் இந்தியாவின் லக்ஷியா செனை வீழ்த்தி 'round of 32' சுற்றுக்கு முன்னேறினார்.
லோ 21-12, 15-21, 21-14 என்ற செட்களில் வென்றார்.
உலகத் தரவரிசையில் லோவுக்கு 13ஆவது இடம்.
செனுக்கு 14ஆவது இடம்.
லோ அடுத்து மலேசியாவின் ஜஸ்டின் ஹோவையோ (Justin Hoh) பங்களாதேஷின் கௌரவ் சிங்காவையோ இன்று சந்திப்பார்.
2023ஆம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுகளில் லோ 'round of 32' சுற்றைத் தாண்டி முன்னேற முடியவில்லை.
ஆசிய விளையாட்டுகள் ஜப்பானின் அயிச்சி (Aichi) -நகோயா (Nagoya) பகுதியில் நடைபெறுகின்றன.
அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போட்டி தொடரும்.