சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் செயல்பாடு ஏப்ரலில் 6.9% குறைந்தது

(படம்: TODAY)
சிங்கப்பூரின் உற்பத்தித் துறையின் செயல்பாடு ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 6.9 விழுக்காடு குறைந்துள்ளது.
தொடர்ந்து ஏழாவது மாதமாக உற்பத்தி சுருங்கியுள்ளது.
உயிர்மருத்துவம் தவிர்த்த மற்ற துறைகளின் உற்பத்தி சென்ற மாதம் 6.1 விழுக்காடு இறங்கியது.
மாதாந்திர அடிப்படையில் உற்பத்தி 1.9 விழுக்காடு குறைந்தது.
போக்குவரத்துப் பொறியியல் துறையின் உற்பத்தி சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.5 விழுக்காடு கூடியது.
கடல்துறைப் பொறியியல் பிரிவின் அபார வளர்ச்சி அதற்கு முக்கியக் காரணம்.
ரசாயனத் துறையின் உற்பத்தி 6.2 விழுக்காடு குறைந்தது. பெட்ரோலியப் பிரிவு தவிர்த்த மற்ற பிரிவுகளின் உற்பத்தி இறங்குமுகமாக இருந்தது.
துல்லியப் பொறியியல், மின்னணு, உயிர்மருத்துவத் துறைகள் 8 விழுக்காட்டுக்கும் மேல் வீழ்ச்சிகண்டன.