Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Kitefoiling போட்டியில் அடுத்தடுத்து சாதனைகளைப் படைக்கும் சிங்கப்பூர் வீரர் மேக்ஸ் மேடர்

வாசிப்புநேரம் -
Kitefoiling போட்டியில் அடுத்தடுத்து சாதனைகளைப் படைக்கும் சிங்கப்பூர் வீரர் மேக்ஸ் மேடர்

SportSG/Jeremy Lee

சிங்கப்பூரின் KiteFoil நீர்சாகச வீரர் மேக்ஸ் மேடர் (Max Maeder) தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார்.

இளையர் மேடர் இத்தாலியில் நடைபெற்ற 2024 IKA KiteFoil World Series எனும் போட்டியில் உலகப் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பின்னர் மேடர் வென்றுள்ள மூன்றாவது பட்டம் அது.

ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூருக்காகப் பதக்கம் வென்ற வீரர்களில் மேடர் ஆக இளையவராவார்.

கடந்த மாதம் அவர் ஆஸ்திரியாவில் நடந்த உலகப் போட்டியில் பட்டத்தை வென்றார்.

கடந்த மாதம் 22ஆம் தேதி சீனாவில் நடந்த ஆசியப் போட்டியிலும் அவர் பட்டத்தைக் கைப்பற்றினார்.

18 வயது மேடர் தொடர்ந்து உலகப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து முத்திரை பதித்துவருகிறார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்