Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஊடகக் கண்காணிப்பு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஊடகக் கண்காணிப்பு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கவிருக்கிறது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, முக்கிய ஊடக நிறுவனங்களில் 30 விழுக்காடு அல்லது அதற்கு மேல் உரிமையோ கட்டுப்பாடோ பெற விரும்பும் எவரும் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

போட்டியை ஒழுங்குபடுத்திப் பயனீட்டாளர்களைப் பாதுகாக்கவும் ஊடக நிறுவனங்களில் தேவையற்ற தலையீடு பரவுவதைத் தடுக்கவும் புதிய மாற்றம் வழியமைக்கும்.

சட்டத் திருத்தம் புதிய ஊடகங்களின் வளர்ச்சிக்கும் போட்டித்தன்மைக்கும் சவாலாக அமையக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விவாதத்தின்போது கூறினர்.

ஊடக நிறுவனங்களுக்கு இடையே நியாயமான போட்டியையும் சந்தை நடைமுறையையும் உறுதி செய்ய அது வழியமைக்கும்; பயனீட்டாளர்களைப் பாதுகாப்பதே நோக்கம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹவ் (Tan Kiat How) கூறினார்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்