Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தண்ணீர் குழாய் கட்டமைப்பில் கண்காணிப்புச் சோதனை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தேசிய தண்ணீர் அமைப்பான PUB அதன் தண்ணீர் குழாய் கட்டமைப்பைக் கண்காணிப்புச் சோதனையைத் தீவிரமாக்கியுள்ளது.

மோசமான வானிலை நிகழ்வுக்குப் பிறகு அவ்வாறு செய்யப்படுகிறது.

தண்ணீர் குழாய்களில் வெடிப்பு ஏற்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) பதிலளித்தார்.

கடந்த மூவாண்டில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றமில்லை என்று PUB தெரிவித்தது.

தீவின் குழாய் கட்டமைப்பில் தண்ணீர் கசிவைக் கண்காணிக்கும் 1,500 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு, PUB 267 குழாய்க் கசிவுகளைச் சீரமைத்தது.

அவற்றில் பத்தில் ஒரு குழாய்க் கசிவினால் மட்டுமே தண்ணீர் விநியோகம் தடைபட்டு வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்