Skip to main content
சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை

WOODLANDS HEALTH CAMPUS

சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்புக்குக் கைகொடுக்க Woodlands Health எனும் புதிய மருத்துவமனை திறக்கப்படவிருக்கிறது.

மருத்துவமனையில் உள்ள 40 சமூகப் படுக்கைகளும் சிறப்பு நிபுணர் மருந்தகங்களும் இன்றிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளன.

மருத்துவமனைப் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை நிலவும் வேளையில் புதிய மருத்துவமனை கைகொடுக்கவிருக்கிறது.

11 காற்பந்துத் திடல்களுக்கு இணையான பரப்பளவு கொண்ட Woodlands Health மருத்துவமனையைக் கட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயின.

கோவிட் காரணமாக, ஓராண்டு தாமதமான நிலையில் மருத்துவமனை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வட்டாரத்தில் உள்ள சுமார் 250,000 குடியிருப்பாளர்களுக்கு மருத்துவமனை சேவை வழங்கும்.

கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையிலிருந்து 15 நிமிடப் பயணத் தொலைவில் Woodlands Health மருத்துவமனை உள்ளது.

கூ டெக் புவாட் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் எப்போதுமே வேகமாக நிரம்பிவிடுகின்றன.

தீவிரக் கண்காணிப்பு தேவைப்படாத நோயாளிகள்
Woodlands Health மருத்துவமனையில் உள்ள சமூகப் பராமரிப்புப் பிரிவுக்கு மாற்றிவிடப்படலாம்.

Woodlands Health மருத்துவமனை அடுத்த ஆண்டு
முழுமையாகச் செயல்படும்போது அங்குச் சுமார் 1000 படுக்கைகள் இருக்கும்.

அதன் நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் சுமார் 400 படுக்கைகள் இருக்கும்.

எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவமனையில் மொத்தம் 1800 படுக்கைகளைச் சேர்ப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதைக்கு நீரிழிவு, ஆஸ்துமா போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மருந்தகங்கள் Woodlands Health மருத்துவமனையில் செயல்படுகின்றன.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிரக் கண்காணிப்பு வார்டுகள் ஆகியவை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்