Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சிங்கப்பூர் தொடர்ந்து உலகிற்குப் பயனுள்ள நாடாக இருக்கவேண்டும்"

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூர் தொடர்ந்து உலகிற்குப் பயனுள்ள நாடாக இருக்கவேண்டும்"

CNA/Syamil Sapari

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Sep 2026 09:48AM புதுப்பிப்பு : 04 Sep 2026 12:16PM

சிங்கப்பூர் தொடர்ந்து உலகிற்குப் பயனுள்ள நாடாக இருக்கவேண்டும். அது சிங்கப்பூரின் நிரந்தரக் கடமை என்று பேராசிரியர் டாமி கோ (Tommy Koh) கூறியிருக்கிறார். 

88 வயதுப் பேராசியர் கோ 55 ஆண்டுகள் வெளியுறவு அமைச்சில் பணியாற்றிக் கடந்த மாதம் ஓய்வுபெற்றார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகச் சட்ட நிலையத்தில் அவர் CNAஉக்குப் பேட்டி தந்தார்.

அந்த நிலையத்தின் வாரியத் தலைவராக அவர் பொறுப்பு வகிக்கிறார். 

"சிறிய நாடுகளுக்கு உலகில் இயல்பாக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. எனவே மற்ற நாடுகளுக்குப் பயனுள்ளதாக இருப்பது அவசியம்," என்றார் அவர். 

"அதேநேரம் பெரிய நாடுகளுக்கு அடிபணியத் தேவையும் இல்லை," என்று பேராசிரியர் கோ குறிப்பிட்டார். 

சிங்கப்பூர் அதிக நட்பு நாடுகளை உருவாக்கவேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்றார் அவர். 

அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தை சிங்கப்பூர் ஏற்கிறது. 

பெரிய நாடுகள் ஒன்றையொன்று நம்பாத நிலையில் அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைக்கும் வலிமை ஆசியானுக்கு உண்டு என்று அவர் குறிப்பிட்டார். 

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்