Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிளவுபட்ட உலகில் சிங்கப்பூர் ஒருமித்த கருத்துகளைக் கண்டறியவேண்டும் - தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்

வாசிப்புநேரம் -
பிளவுபட்ட உலகில் சிங்கப்பூர் தன்னால் முடிந்தவரை ஒருமித்த கருத்துகளைக் கண்டறியவேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

மாறுபட்ட கருத்துகளைக் கவனமாகக் கையாளவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மியூனிக் (Munich) பாதுகாப்பு மாநாட்டுக்கு இடையே திரு சான் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூர் காலத்துக்குப் பொருத்தமாக இருப்பது ஆற்றல்களையும் புரிதலையும் வலுப்படுத்துவதில் உள்ளது என்றார் அவர்.

வல்லரசுகளின் சிந்தனைக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் குடியரசு அறிந்திருக்கவேண்டும்.

அப்போதுதான் பயனுள்ள வழியில் சிங்கப்பூரால் பங்காற்ற முடியும் என்று திரு சான் கூறினார்.

மூன்று நாள் மியூனிக் பாதுகாப்பு மாநாடு இன்று நிறைவடைகிறது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்