காமன்வெல்த் போட்டி - 200 மீட்டர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் சாந்தி பெரேரா
வாசிப்புநேரம் -
படம்: Commonwealth Games Singapore/Lim Weixiang
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காமன்வெல்த் போட்டியில் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா (Shanthi Pereira) 200 மீட்டர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
தகுதிச்சுற்றில் அவர் 2ஆம் இடத்தில் ஓடி முடித்தார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23 விநாடி.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 31ஆம் தேதி) அவர் அரையிறுதிச் சுற்றில் கலந்துகொள்வார்.
2023ஆம் ஆண்டு உலக வெற்றியாளர் (World Championships) போட்டியின் 200 மீட்டர் சுற்றில் அவர் 22.57 விநாடிகளில் ஓடி முடித்துத் தேசியச் சாதனை படைத்திருந்தார்.
நேற்று (ஜூலை 28ஆம் தேதி) நடந்த 100 மீட்டர் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அரையிறுதிச் சுற்றில் அவர் 5ஆம் இடத்தில் ஓடி முடித்தார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.40 விநாடி.
அரையிறுதிச் சுற்றில் போட்டியிட்ட 24 வீராங்கனைகளில் அவர் 14ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஆதாரம் : CNA