வரலாறு படைத்தார் சாந்தி பெரேரா
TeamSG/Lim Weixiang
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் தங்கமங்கை சாந்தி பெரேரா (Shanti Pereira) புதிய வரலாறு படைத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியின் 200 மீட்டர் இறுதிச் சுற்றுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
அந்த நிலையை அடைந்திருக்கும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமை சாந்தி பெரேராவைச் சேர்கிறது.
கிளாஸ்கோவில் (Glasgow) நடந்த அரையிறுதிப் போட்டியில் 22.81 விநாடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்தார் சாந்தி.
இந்தப் பருவத்தில் அது அவருடைய சிறப்பான சாதனை.
அரையிறுதிப் போட்டியில் 3 பந்தயங்கள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பந்தயத்திலிருந்தும் ஆக வேகமான இருவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுகின்றனர்.
அடுத்து வேகமாக வரும் இருவரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.
தம்முடைய பந்தயத்தில் மூன்றாம் இடத்தில் வந்த சாந்தி, ஒட்டுமொத்தத்தில் 8ஆம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
200 மீட்டர் இறுதிச் சுற்று நாளை (1 ஆகஸ்ட்) நடைபெறும்.