Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலை விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலை விகிதம் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளது.

ஐந்தாவது காலாண்டாக அத்தகைய வளர்ச்சி பதிவாகியுள்ளதாய் மனிதவள அமைச்சு கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களைக் கணக்கில் சேர்க்காமல் வேலை விகிதம் கடந்த ஆண்டின் (2022) கடைசி மூன்று மாதங்களில் சுமார் 47,000க்கு உயர்ந்தது.

அதற்கு முந்தைய காலாண்டில் வேலை விகிதம் சுமார் 78,000ஆக இருந்தது.

ஆண்டிறுதிக் கொண்டாட்டங்களுக்காகச் சில்லறை வர்த்தகம், உணவு, பானச் சேவைகள் ஆகியவற்றில் உள்ளூர்வாசிகள் அதிகம் பணியமர்த்தப்பட்டதாக அமைச்சு சொன்னது.

இது நோய்த்தொற்றுச் சூழலுக்கு முந்திய நிலையை விட 3 விழுக்காடு அதிகம்.

கடந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த வேலை விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவாக 231,700 கூடியது.

நான்காம் காலாண்டில் ஆட்குறைப்புச் செய்யப்பட்டோர் எண்ணிக்கை, 3,000க்கு அதிகரித்தது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்