உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டி - 50m மல்லாந்த நீச்சலில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் சிங்கப்பூரின் யிப் பின் சியூ
உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ (Yip Pin Xiu) 50 மீட்டர் மல்லாந்த நீச்சலின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று (31 ஆகஸ்ட்) S2 பிரிவுக்கான தகுதிச்சுற்றில் அவர் முதலிடத்தில் வந்தார்.
அவர் 1 நிமிடம் 05.06 விநாடிகள் எடுத்துக்கொண்டார்.
2 தகுதிச்சுற்றுகளில் சிறந்த 8 இடங்களில் வந்த நீச்சல் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவர்.
இறுதிச்சுற்று இன்று பின்னிரவு சுமார் 1.50 மணிக்கு நடைபெறும்.
2016,2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியில் யிப் 50 மீட்டர் மல்லாந்த நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றவர்.
அவர் நேற்று (30 ஆகஸ்ட்) பெண்கள் 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் S2 பிரிவிலும் வெற்றி பெற்றார்.