சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது இளையர் காற்பந்து லீக்
வாசிப்புநேரம் -
(படம்: Singapore Youth League/Facebook)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் இளையர் காற்பந்து லீக், சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஆக அதிகமான ஆட்டங்களை ஒரே நேரத்தில் தொடங்கியது தான் அந்தச் சாதனை.
இன்று காலை எட்டு அரங்குகளில் 36 காற்பந்தாட்டங்கள் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின.
புதிய பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கத் தீவு முழுவதும் 6,000 இளம் ஆண், பெண் காற்பந்து விளையாட்டாளர்கள் களமிறங்கினர்.
Unleash The Roar எனும் தேசியத் திட்டத்தின் கீழ் லீக் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பருவத்தில் மொத்தம் 316 குழுக்கள் பங்கேற்கும்.
கடந்த ஆண்டை விட அது 58 விழுக்காடு அதிகம்.
புதிய 'மகளிர் மட்டும்' லீகில் 18 குழுக்கள் உச்சப் பரிசுக்குப் போட்டியிடும்.
நவம்பரில் பருவம் முடியும் வரை வாரந்தோறும் ஆட்டங்கள் இடம்பெறும்.