$1.41 மில்லியன் திரட்டியிருக்கும் SingHealth
Facebook/Changi General Hospital (CGH)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் மிகப் பெரிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான SingHealth இந்த ஆண்டின் அதிபர் சவாலுக்காக ஒன்று புள்ளி 4-1 மில்லியன் வெள்ளி திரட்டியிருக்கிறது.
2004ஆம் ஆண்டு நிதித்திரட்டு தொடங்கியதிலிருந்து SingHealth திரட்டியிருக்கும் ஆக அதிகமான தொகை இது.
இன்று காலை சாங்கி பொதுமருத்துவமனையில் அது பற்றிய விவரம் வெளியிடப்பட்டது.
90 ஆண்டு நிறைவை அனுசரிக்கும் சாங்கி பொது மருத்துவமனை இந்த ஆண்டுக்கான அதிபர் சவாலை வழிநடத்தியது.
13 SingHealth நிலையங்களைச் சேர்ந்த 38,000 ஊழியர்கள் இயக்கத்தில் கலந்துகொண்டனர்.
திரட்டப்படும் நிதி நான்கு அறநிறுவனங்களுக்கு வழங்கப்படும்.