Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்த உதவும் புதிய உலகளாவிய திட்டம்

வாசிப்புநேரம் -
சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்த உதவும் புதிய உலகளாவிய திட்டம்

படம்: Singhealth/Facebook

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

SingHealth குழுமம் சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகிகளின் திறன்களை வலுப்படுத்தப்
புதிய உலகளாவிய பரிமாற்றத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை அனுபவம் பெறுவதற்குத் திட்டம் கைகொடுக்கும்.

முன்னணிச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் தலைமைத்துவப் பொறுப்புகளை எவ்வாறு கையாள்கின்றன என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

நோயாளிகளைச் சமாளிக்கும் அனுபவம், வளங்களை நிர்வகித்தல் போன்றவற்றில் உருமாற்றத்தையும் புத்தாக்கத்தையும் கொண்டுவர ஊழியர்கள் கற்றுக்கொள்ளலாம்.

வெளிநாடுகளின் சிறந்த நடைமுறைகளை சிங்கப்பூரில் செயல்படுத்தி நோயாளிப் பராமரிப்பை மேம்படுத்துவது நோக்கம்.

SingHealth குழுமம் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றில் செயல்படும் ஒன்பது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும்.

தேர்வுசெய்யப்பட்ட நிர்வாக ஊழியர்கள் ஆறிலிருந்து எட்டு வாரம்வரையிலான பரிமாற்றத் திட்டத்தில் பங்கெடுப்பர்.

அடுத்த ஐந்தாண்டில் 40 நிர்வாகிகளைப் பயிற்சிக்கு அனுப்பவிருப்பதாய் SingHealth கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூரில் பயிற்சிபெறுவர்.

மற்றவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று பார்த்துத் தெரிந்துகொள்வது மட்டும் திட்டம் அல்ல என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத்துக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பராமரிப்பில் தலைசிறந்து விளங்குபவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு ஒரு சமூகமாக இணையத் திட்டம் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்