அஞ்சல் அனுப்பவேண்டுமா? 20 காசு கூடுதலாகச் செலுத்தவேண்டும்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Reuters/Thomas White)
Singapore Post (SingPost) நிறுவனம் அஞ்சல் கட்டணத்தை 20 காசு அதிகரித்துள்ளது.
சாதாரண அஞ்சல் கட்டணம்
இப்போது - 31 காசு
இனி - 51 காசு
அது அடுத்த மாதம் 9ஆம் தேதி நடப்புக்கு வரும்.
செலவுகள் அதிகரிக்கின்றன...அஞ்சல்கள் குறைகின்றன...
கடந்த 5 நிதியாண்டுகளில் அஞ்சல் அனுப்பும் போக்கு 40 விழுக்காடு குறைந்துள்ளது.
அஞ்சல் சேவையைத் தொடர்வதற்கு கட்டணத்தைச் சுமார் 65 விழுக்காடு உயர்த்தவேண்டியிருப்பதாக நிறுவனம் சொன்னது.
அஞ்சல் சேவையை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வர்த்தகமாக மாற்றவும் SingPost எண்ணுகிறது.
உள்ளூரில் அஞ்சல் அனுப்பும்போது இனி அதன் எடை பார்க்கப்படாது.
பயனீட்டாளர்கள் எளிதில் அஞ்சலை அனுப்ப அது உதவும் என்று நிறுவனம் சொன்னது.

ஆதாரம் : CNA/fh(rj)