Singtel இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

கோப்புப் படம்: Reuters/Edgar Su
Singtel நிறுவனத்தின் விரிவலைக் கட்டமைப்புச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.
சிங்கப்பூரின் வடக்கு வட்டாரங்களில் உள்ள Singtel வாடிக்கையாளர்கள் சிலர்
இன்று (24 மார்ச்) பிற்பகலிலிருந்து பிரச்சினையை எதிர்நோக்கினர்.
தொலைக்காட்சி சேவைகளும் Home Digital Line எனப்படும் இணையத் தொலைபேசி அழைப்புச் சேவையும் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக சுவா சு காங், புக்கிட் பாஞ்சாங், உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக Singtel மாலை 5.35 மணியளவில் Facebookஇல் சொன்னது.
இரண்டு மணிநேரமாகப் பிரச்சினை நீடிப்பதாகவும் விரைந்து நடவடிக்கையெடுத்தால் நல்லது என்றும் இணையவாசிகள் சிலர் கருத்துரைத்தனர்.
Singtel சேவையில் தடங்கல் என்று பிற்பகல் 3.45 மணியிலிருந்து புகார் வந்துகொண்டிருப்பதை Downdetector தளம் காட்டியது.
சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக Singtel இரவு 7.50 மணியளவில் சொன்னது.