Skip to main content
தஞ்சோங் காத்தோங் ரோட்டில் திடீர்ப் பள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தஞ்சோங் காத்தோங் ரோட்டில் திடீர்ப் பள்ளம்

வாசிப்புநேரம் -
தஞ்சோங் காத்தோங் ரோட்டில் திடீர்ப் பள்ளம்
வெளியீடு : 26 Jul 2025 08:02PM புதுப்பிப்பு : 26 Jul 2025 08:45PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தஞ்சோங் காத்தோங் சௌத் ரோட்டில் இன்று (26 ஜூலை) திடீர்ப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியின்படி கட்டுமானத் தளத்துக்கு அருகே உள்ள சாலைப்பகுதியில் பெரிய துளை தென்படுகிறது.

அதில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது.

Related article image
படம்: CNA

மற்ற காணொளிகளில் ஒரு கார் அதில் விழுந்துகிடப்பதையும் காணமுடிகிறது.

கூகள் வரைபடத்தின்படி சாலை நாளை வரை மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீர்ப் பள்ளம் இப்போது சீர்செய்யப்படுவதைக் கண்டதாகReddit சமூக ஊடகத்தில் இணையவாசிகள் சிலர் பதிவிட்டனர்.

"ஓர் அறையின் அளவில் திடீர்ப் பள்ளம் ஏற்பட்டது. அதன் பின்னர் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் சாலையின் தடத்தை முடக்கினர்," என்று சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் சொன்னார்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்