தஞ்சோங் காத்தோங் திடீர்ப் பள்ளம்: பாதிக்கப்பட்ட கார் உரிமையாளருக்கு இழப்பீடு கிடைக்குமா?
வாசிப்புநேரம் -
CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர்ப் பள்ளத்தில் கார் ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து அதன் உரிமையாளருக்கு இழப்பீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பாலும் இயற்கைப் பேரிடர்கள் அல்லது மரம் விழுவது, மின்னல் தாக்குவது போன்ற மனிதர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விபத்துகள் ஆகியவற்றுக்குக் காப்புறுதி நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில்லை.
ஆனால் சிங்கப்பூரில் இயற்கையாக நிகழும் விபத்துகளுக்கு இழப்பீடு மறுக்கப்படுவது அரிது என்று கூறுகிறார் மூத்த நிதி ஆலோசகர் சென் ஷுவேயி (Chen Xueyi).
பெரும்பாலான நேரங்களில் விபத்துக்குக் காரணமான தரப்பு விசாரணையில் அடையாளம் காணப்படும் என அவர் சுட்டினார்.
உதாரணத்திற்கு மரம் விழுந்து ஒருவர் காயமடைந்தால் அதற்கு மோசமான வானிலை என்று மட்டும் காரணம் சொல்லிவிடமுடியாது; முறையற்ற பராமரிப்பு, நிலவனப்புப் பணிகள்கூட காரணமாக அடையாளம் காணப்பட வாய்ப்புண்டு என்றார் திருவாட்டி சென்.
அதேபோல தஞ்சோங் காத்தோங் விவகாரத்தில் திடீர்ப் பள்ளம் ஏற்பட நீர்க்குழாய்க் கசிவு, முறையற்ற நில அளவை அல்லது கவனக்குறைவு போன்ற காரணங்கள் கண்டறியப்படுவதற்கு வாய்ப்புண்டு என Prudential நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து நிர்வாகி திருவாட்டி கிரிஸ்ட்டல் ஹுவாங் (Crystal Huang) குறிப்பிட்டார்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட தரப்பிடமிருந்து சட்டரீதியாக இழப்பீடு கோரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதி பெற்றிருப்பது அவசியம் இல்லை என்றும் சொல்கின்றனர்.
ஆனால் விபத்து நடக்க பாதிக்கப்பட்டவர்களின் கவனக்குறைவும் காரணம் என்பது நிரூபணமானால் அவர்கள் பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகை குறையும் என்று தெரிவித்தார் Hoh Law Corporation நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு N ஸ்ரீனிவாசன்.
உதாரணத்திற்குத் திடீர்ப் பள்ளம் திறப்பதைக் கண்ட கட்டுமான ஊழியர் கார் ஓட்டுநரை எச்சரித்தும் அவர் காரை முன்னோக்கிச் செலுத்திப் பள்ளத்தில் விழுந்திருந்தால் விபத்துக்கு அவரது கவனக்குறைவும் காரணமாகக் கருதப்படலாம் என்று அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA