திடீர்ப் பள்ளம் - தஞ்சோங் காத்தோங் ரோடு நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்
வாசிப்புநேரம் -
படம்: Grace Fu/Facebook
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
திடீர்ப் பள்ளத்தால் மூடப்பட்ட தஞ்சோங் காத்தோங் சாலையின் தென் பகுதி நாளை முதல் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் PUB தேசியத் தண்ணீர் அமைப்பும் அறிக்கை வழி அதனைத் தெரிவித்தன.
ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையிலிருந்து (ECP) இருந்து மவுண்ட்பேட்டன் ரோடு (Mountbatten Road) வரையிலான தஞ்சோங் காத்தோங் சாலையின் தென்பகுதி நாளை நண்பகல் போக்குவரத்துக்குத் திறக்கப்படும்.
எதிர்த்திசையில் மவுண்ட்பேட்டன் ரோட்டிலிருந்து இருந்து ECP வரையிலான பகுதி திங்கட்கிழமை (4 ஆகஸ்ட்) அதிகாலை 5 மணி முதல் திறக்கப்படும்.
பாதிக்கப்பட்ட சாலையிலும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளிலும் பழுதுபார்ப்பு பணிகளும் பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக்கைகளும் முடிந்திருப்பதாக அமைப்புகள் தெரிவித்தன.
சாலைகள் பயன்படுத்தப் பாதுகாப்பானவை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எண் 36, எண் 48 பேருந்துச் சேவைகள் நாளை நண்பகல் மீண்டும் தொடங்கும்.
தற்காலிகமாக வழி மாற்றிவிடப்பட்ட இன்னும் சில பேருந்துச் சேவைகள் ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து வழக்கத்துக்குத் திரும்பும்.

தொடர்புடையவை:
ஆதாரம் : Others