Skip to main content
சிங்கப்பூரில் பாதாளக் குழி ஏற்பட்ட சம்பவங்களில் சில...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பாதாளக் குழி ஏற்பட்ட சம்பவங்களில் சில...

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பாதாளக் குழி ஏற்பட்ட சம்பவங்களில் சில...

(கோப்புப் படம்: OOI BOON KEONG)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள நடைபாதையில் பாதாளக் குழி ஏற்பட்டது. இந்தியச் சுற்றுப்பயணியான திருவாட்டி விஜயலெட்சுமி அதனுள் விழுந்தார். அவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. 

சிங்கப்பூரிலும் பாதாளக் குழி ஏற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

அவற்றுள் சில....

1. பேரர் ரோடு (Farrer Road)

பேரர் ரோட்டில் சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரோட்டின் ஒரு பகுதியில் பாதாளக் குழி ஏற்பட்டது. 

எப்போது நடந்தது: 2022

2. அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட் (Upper Changi Road East)

அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் ஒரு பகுதியில் குழி ஏற்பட்டதில் அந்த வழியே சென்றுகொண்டிருந்த 
'tipper' டிரக் 2 மணி நேரத்திற்கும் மேல் சிக்கிக்கொண்டது. 

எப்போது நடந்தது: 2014

Related article image
(படம்: TodayOnline/Don Wong)

3. உட்லண்ட்ஸ் ரோடு  (Woodlands Road)

டௌன்டவுன் இரண்டாம் பாதைக்காக நிலந்தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைகுலைந்த மண்ணால் நிலத்தடிக் குழாய் பாதிப்படைந்தது. அதனால் உட்லண்ட்ஸ் ரோட்டில் பெரிய குழி ஏற்பட்டது. 

எப்போது நடந்தது: 2013

4. கெப்பல் ரோடு (Keppel Road) 

ஆயர் ராஜா விரைவுச்சாலையை (Ayer Rajah Expressway - AYE) நோக்கிச் செல்லும் கெப்பல் ரோட்டில் பாதாளக் குழி ஏற்பட்டது. குழாயிலிருந்து ஏற்பட்ட நீர்க் கசிவு அதனை உண்டாக்கியதாக நம்பப்படுகிறது.

எப்போது நடந்தது: 2013

5.  ஹாலந்து வில்லேஜ் (Holland Village)

ஹாலந்து வில்லேஜின் Cornwall Gardensஇல் குழி உண்டானது. பெருவிரைவு ரயில் வட்டப் பாதைக்கான (Circle Line) நிலந்தோண்டும் பணிகள் அங்கு நடைபெற்றன.

எப்போது நடந்தது: 2008

ஆதாரம் : Today

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்