வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு SIT வழங்கிய கல்வி உதவிநிதி்

படம்: Singapore Institute of Technology
SIT எனும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விக்கழகம் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேருக்கு 5,000 வெள்ளி கல்வி உதவிநிதி வழங்கியுள்ளது.
ஓர் உள்ளூர் வர்த்தகர் வழங்கிய 2.6 மில்லியன் வெள்ளி நன்கொடையின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் கல்வி உதவிநிதி வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் வருங்கால வளாகத்தை மேம்படுத்தவும் நன்கொடை பயன்படுத்தப்படும்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் புதிய வளாகம் அமையும்.
மாணவர்களுக்கும் துறைசார்ந்த பங்காளிகளுக்கும் இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்த அது உதவும்.
ஈராண்டுகளில் தயாராகவிருக்கும் புதிய வளாகத்துக்கு டாக்டர் சுவா தியன் போவின் பெயர் சூட்டப்படும்.
Ho Bee Group சொத்து மேம்பாட்டு நிறுவனத் தலைமை நிர்வாகியான அவர் வழங்கிய நன்கொடைக்கு அங்கீகாரமாக அது அமையும்.
பல்கலைக்கழக வளாகத்தில் தற்போதுள்ள மாணவர் நடவடிக்கை நிலையமும் அவருடைய பெயரில் இயங்கும்.