Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SIT பட்டம் பட்டதாரிகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு ஏற்கனவே வேலை உறுதி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (SIT) இவ்வாண்டு பட்டம் பெற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு ஏற்கனவே வேலை கிடைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், தகவல்-தொடர்புத் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களில் 90க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) பேசினார்.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைச் சுகாதாரத்துறைப் பட்டதாரிகளுக்குத் தொடர்ந்து நல்ல வேலைவாய்ப்புகள் அமையும் என்று அவர் சொன்னார்.

அவர்கள் வளர்ந்து வரும் தொழில்துறையில் இருப்பதை அவர் சுட்டினார்.

நோயாளிகள் எவ்வாறு கையாளப்படுகின்றனர்;
அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை  தொழில்நுட்ப மேம்பாடுகள் மாற்ற உறுதியளிப்பதாகத் திரு. வோங் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்