சிங்கப்பூரில் காப்பி, தேநீரில் குறைவான சர்க்கரை - 2 காப்பிக்கடைச் சங்கங்கள் ஆதரவு
வாசிப்புநேரம் -
CNA
சிங்கப்பூரில் காப்பி, தேநீர் போன்ற பானங்களைக் குறைந்த சர்க்கரையோடு வழங்குவதை ஊக்குவிக்கும் இயக்கத்திற்கு இரண்டு முக்கிய காப்பிக்கடைச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Foochow Coffee Restaurant & Bar Merchants சங்கம், Kheng Keow Coffee Merchants Restaurant and Bar-Owners சங்கம் ஆகியவை தெரிவித்த ஆதரவை சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பாராட்டினார்.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் அந்த இயக்கம் "Siu Dai by default” என்று அழைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அது அறிமுகம் கண்டது.
ஆதரவு தெரிவித்த இரண்டு சங்கங்களின் கீழ் சுமார் 500 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சிங்கப்பூரில் உள்ள காப்பிக்கடைகளின் எண்ணிக்கையில் அது 50 விழுக்காட்டுக்கும் அதிகம்.
சர்க்கரை குறைவான பானம் எளிதாகக் கிடைக்கும் சாத்தியத்தை இயக்கம் அதிகரிக்கும்.
சிங்கப்பூரில் பாதிக்கும் அதிகமானோரின் அன்றாடச் சர்க்கரை பெரும்பாலும் தேநீர், காப்பி போன்ற பானங்களில் இருந்து அவர்களின் உடலில் சேர்கிறது.
அளவுக்கு அதிகமான சீனி, உடல்பருமன், நீரிழிவு நோய், இதயப் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.