சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"மேலும் பல கடைகள் குறைந்த சர்க்கரையோடு காப்பி, தேநீர் விற்றால் நல்லது"
சிங்கப்பூரில் இரண்டு முக்கிய காப்பிக்கடைச் சங்கங்கள் காப்பி, தேநீர் போன்ற பானங்களில் குறைந்த சர்க்கரையைச் சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அவை சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் “Siu Dai by default” இயக்கத்திற்கு இணங்க அந்த முடிவை எடுத்துள்ளன.
"இன்னும் பல உணவு, பான நிறுவனங்கள் குறைந்த சர்க்கரையோடு பானங்களை விற்றால் நல்லது. குறைந்த சர்க்கரையை உட்கொள்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்," என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் (Health Promotion Board) 'செய்தி'யிடம் கூறியது.
மக்கள் தங்களது உடல் நலனைக் கருத்தில்கொண்டு ஆரோக்கியமான பானங்களைக் குடிக்குமாறு அது ஆலோசனை கூறியது.
'Siu Dai by default' என்பது இயக்கத்தின் பெயர். Siu Dai என்பது காப்பி, தேநீரில் குறைவான சர்க்கரையைச் சேர்ப்பதைக் குறிக்கும்.
காப்பி, தேநீர் போன்றவற்றில் குறைந்த சர்க்கரையைச் சேர்ப்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
'Siu Dai by default' இயக்கத்திற்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது?
கண்டறிந்தது 'செய்தி'.