Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SkillsFuture அமைப்பின் நடவடிக்கைகள் 2022இல் 560,000 தனிநபர்களுக்கும் 20,000 நிறுவனங்களுக்கும் நன்மை அளித்துள்ளன

வாசிப்புநேரம் -
SkillsFuture சிங்கப்பூர் அமைப்பின் நடவடிக்கைகள், கடந்த ஆண்டு சுமார் 560,000 தனிநபர்களுக்கும் 20,000 நிறுவனங்களுக்கும் பலன் அளித்துள்ளன.

2021ஆம் ஆண்டு ஆக அதிமானோர் SkillsFuture திட்டங்களுக்குப் பதிவு செய்திருந்ததோடு ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இருப்பினும் நோய்ப்பரவலுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அது அதிகம்.

இன்னும் கூடுதலான சிங்கப்பூர்களிடம் SkillsFuture திட்டங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க, அமைப்பு
34,000க்கும் மேற்பட்ட தனிநபர்களைச் சந்தித்துள்ளது.

தனிப்பட்ட திறன், பயிற்சித் திட்டத்தின்கீழ் சுமார் 6,600 பேருக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.

சென்ற ஆண்டின் SkillsFuture விழாவில் 250,000 பேர் பங்கேற்றனர்.

சிங்கப்பூரர்கள் வாழ்நாள் கற்றல் பயணத்தைத் தொடங்குவதற்கு SkillsFuture சிங்கப்பூர் அமைப்பு இன்னும் அதிகமான பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றும் என்று கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்