தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டு புரியும் திருவாட்டி சாந்தி செல்லப்பனுக்கு அ. நா. மெய்தீன் விருது
வாசிப்புநேரம் -
கல்வி, தமிழ்வளர்ச்சி, சமுதாய மேம்பாடு ஆகியவற்றில் முன்மாதிரியாகத் திகழும் திருவாட்டி சாந்தி செல்லப்பனுக்கு அ. நா. மெய்தீன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மரபுகளைக் கட்டிக்காப்போருக்கும் தமிழின் நீடித்த வளர்ச்சிக்குத் தொண்டு புரிவோருக்கும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அந்த விருதை வழங்குகிறது.
குடும்பச் சூழலும், பிள்ளைகள் கற்கும் முறையும் மாறியுள்ளன.
அத்தகைய நிலையில் தமிழ்மொழியை எப்படி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதை ஆராய வேண்டும் என்றார் விருது வென்ற உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் நிலைய இயக்குநர், திருவாட்டி சாந்தி செல்லப்பன்.
மொழி என்று வரும்போது அதனை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் முயற்சி பள்ளிகளையும் தமிழாசிரியர்களையும் மட்டுமே சார்ந்திருக்கூடாது. சமூகமும் அதில் இணைந்துகொள்ள வேண்டும் என்றார் திருவாட்டி சாந்தி.
ஒவ்வோர் அமைப்புக்குமே அவர்களுடைய வேலை என்று ஒன்று இருக்கும். ஆனால் அந்த வேலையையும் செய்ய வேண்டும். மொழிக்காகவும் உழைக்க வேண்டும். அது சாத்தியமாக வேண்டுமென்றால் அதற்கென ஒரு முயற்சி வேண்டும். அப்படி செய்யும்போது ஒட்டுமொத்த சமுதாயமே மிகச் சிறப்பாக விளங்கும் என்றார் அவர்.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் நடத்திய "உமறுப்புலவர் நினைவு அரங்கம்" எனும் நிகழ்ச்சியில்
அ. நா. மெய்தீன் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் நிகழ்ச்சி, கவிதைகளில் கவனம் செலுத்தியது.
கவிதை எழுதும் பயிலரங்கு, கவிதை படைத்தல் உள்ளிட்ட அங்கங்கள் இடம்பெற்றன.