Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

பதவியேற்புச் சடங்கின் விருந்து உபசரிப்பில் வடையைப் பரிமாறும் இந்திய உணவங்காடி

வாசிப்புநேரம் -
இஸ்தானாவில் இன்று நடைபெறும் பதவியேற்புச் சடங்கின் விருந்து உபசரிப்பில் Sky Lab Cooked Food உணவங்காடி நிலையத்தின் வடைகளும் சமோசாக்களும் பரிமாறப்படவிருக்கின்றன.

இறால் வடை, மசாலா வடை என்று இரண்டு வகையான வடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இஸ்தானாவில் இன்று இந்திய உணவை வழங்கும் ஒரே உணவங்காடிக்காரர் Sky Lab Cooked Food.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு விருந்து உபசரிப்பில் வடை இடம்பெறவேண்டும் என்று முடிவு செய்தவுடன் தங்களை அணுகியதாக Sky Lab Cooked Food உணவங்காடியின் உரிமையாளர் திரு. மோகன ராஜ் 'செய்தி'யிடம் கூறினார்.

44 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கடையை 1960களில் திருவாட்டி பொன்னம்மா சண்முகத்தின் தந்தை Prawn & Dhal Vadai (Prawn) Sky Lab என்ற உணவங்காடியை ஆரம்பித்தார்.

சில ஆண்டுகள் கழித்து திருவாட்டி பொன்னம்மாவின் தாயார் சிங்கப்பூரர்களின் ருசிக்கு ஏற்ற வகையில் வடையின் செய்முறையை மாற்றினார்.

முதலில் ஷார்ட் ஸ்டீரிட்டில் (Short Street) இயங்கிய
வடைக்கடை, Rex திரையரங்கின் பின்பகுதியில் உள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் 1980களில் கடை தேக்கா நிலையத்தில் திறக்கப்பட்டது.

இன்று வரை அது அங்கிருந்து இயங்குகிறது.

திருவாட்டி பொன்னம்மாவும் அவரது கணவரும் கடையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

இன்று அவரது பேரனுடன் அந்தக் குடும்பத் தொழில் நான்காவது தலைமுறையாகத் தொடர்வதாக அவர்கள் 'செய்தி'யிடம் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்