Skip to main content
தூங்க உதவும் 'sleep gummies'... ஆபத்துகள் ஏதும் உண்டா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

தூங்க உதவும் 'sleep gummies'... ஆபத்துகள் ஏதும் உண்டா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

'Sleep gummies'... இதை விளம்பரங்களில், கடைகளில் பலரும் பார்த்திருக்கலாம்.

"இயற்கைப் பொருள்கள் கொண்டவை..."

"இயற்கையாகவே தூக்கத்தைத் தூண்ட உதவக்கூடியவை..."

எனப் பல பரிமாணங்களில் 'sleep gummies' விற்கப்படுகின்றன.

இரவில் நல்ல தூக்கம் பெற அவை உதவுவதாக நம்பப்படுகிறது.

அவற்றை வாங்கி உட்கொள்ள மருத்துவக் குறிப்பு தேவையில்லை.

💊இயற்கை என்று சொன்னாலும், அதில் உடல்நல ஆபத்துகள் ஏதும் உள்ளதா?

Sleep gummies-இல் பொதுவாகப் பெரிய ஆபத்தான பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது என்கிறார் டாக்டர் பைசல்.

"அவற்றுக்கு அடிமையாகும் அபாயமும் இல்லை. குறுகிய காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்."

"தூரமாக இருக்கும் நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது தூங்கும் நேரம் மாற வாய்ப்புகள் உண்டு. அத்தகைய சூழல்களில் தூக்கம் பெற அவை உதவுகின்றன"

என்று அவர் சொன்னார்.

💊யாருக்கு உகந்தது?

வாழ்நாளில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் பலருக்கு வரலாம்...

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து அதைக் கையாள முடிந்தால் sleep gummies எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்கிறார் டாக்டர் பைசல்.

தூக்கமின்மை வேலை, பள்ளி ஆகியவற்றைப் பாதிக்கத் தொடங்கினால், sleep gummies பயனுள்ளதாக இருக்கலாம் என்று அவர் சொன்னார்.

தூக்கத்தை மேம்படுத்த உதவும் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு...

- நாள்பட்ட நோய் உள்ளோர்
- சிறு பிள்ளைகள்
- மூத்தோர்
- கர்ப்பிணிகள்

ஆகியோர் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம் என்றார் டாக்டர் பைசல்.

💊"Sleep gummies - விழிப்புணர்வு அதிகரித்துள்ளது"

அது குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக டாக்டர் பைசல் குறிப்பிட்டார்.

அவற்றைப் பற்றிப் பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

"பல இடங்களில் கிடைக்கிறது. யார் வேண்டுமென்றாலும் எளிதில் வாங்கிக்கொள்ளலாம்."

"சமூக ஊடகத்தில் அதைப் பற்றிய தகவல்கள் பரவலாக உள்ளன."

அதனால் அவை பிரபலமாகியிருக்கலாம் என்று டாக்டர் பைசல் குறிப்பிட்டார்.

ஆனால் ஒன்று. இயற்கையான தூக்கமே நல்லது. நல்ல உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, அமைதியான மனம் ஆகியவை நல்ல தூக்கத்துக்கு நல்லது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்