Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சமூகத்திற்குப் பங்காற்றும் மனமும் ஆர்வமும் இளையர்களுக்கு உண்டு: மூத்த அமைச்சர் லீ

வாசிப்புநேரம் -
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தமது இளையர் தின வாழ்த்துகளை Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையர்களுக்குத் தமது ஆலோசனை என்னவென்று பல பேட்டிகளிலும் உரையாடல்களிலும் தம்மிடம் கேட்கப்படுவதாக அவர் சொன்னார்.

இன்றைய இளையர்களுக்கு அவர்களது பெற்றோரைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள் இருப்பதைத் திரு லீ குறிப்பிட்டார்.

"நிச்சயமற்ற உலகில் சிறந்து விளங்குவதற்குப் பயிற்சியும் திறனும் இளையர்களுக்கு இருக்கிறது. உலக, நாட்டு நடப்பு குறித்த புதிய கண்ணோட்டமும் இருக்கிறது. முக்கியமாகச் சமூகத்திற்குப் பங்காற்றும் மனமும் பேரார்வமும் இளையர்களுக்கு உண்டு," என்றார் திரு லீ.

இளையர்கள் தங்கள் கனவு எதிர்காலத்தை உருவாக்கமுடியும் என்றார் அவர்.

"துணிவுடன் இருங்கள்; சவால்களை எதிர்கொள்ளுங்கள்! இளையர்களுக்கும் மனத்தளவில் இளையர்களாக இருக்கும் அனைவருக்கும் இளையர் தின வாழ்த்துகள்," என்றார் திரு லீ.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்