Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பல துறை வர்த்தகங்களைக் கருத்தில்கொண்டு வரவுசெலவுத் திட்டம் வரையப்பட்டுள்ளது: வர்த்தகத் தலைவர்கள்

வாசிப்புநேரம் -

வரவுசெலவுத் திட்டம், ஒட்டுமொத்தத்தில் பல்வேறு தரப்பினரையும் கருத்தில்கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பான திட்டமென்று கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

நேற்று (18 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் மொத்தம் 109 பில்லியன் வெள்ளி மதிப்பிலான  வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.  

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, அதைக் கருத்தில்கொண்டு, நன்று பரிசீலித்த பிறகே வரவுசெலவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,

என்று சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபையின் தலைவர் டாக்டர் T. சந்துரு கூறினார்.

வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்

கிருமிப்பரவல் சூழலிலிருந்து நாட்டின் பொருளியல் மெல்லமெல்ல மீட்சி அடைந்துவருகிறது. 

இருப்பினும் சில்லறைத்துறை, பயணத்துறை போன்றவை இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன.

500 மில்லியன் வெள்ளி வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம் அவற்றுக்கு உதவும் என்று டாக்டர்  சந்துரு கூறினார்.

நோய்த்தொற்றுச் சூழலில் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ,  சிறு-தொழில் மீட்சி மானியமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் தகுதிபெறும் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவை பணியமர்த்தியிருக்கும் ஒவ்வோர் உள்நாட்டு ஊழியருக்கும் 1,000 வெள்ளி மானியம் பெறலாம்.

பொருளியல் மந்தநிலையில் சிறிய,நடுத்தர நிறுவனங்களுக்கு நிறைய சவால்கள்.  திறன்வாய்ந்த ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதும் மிகவும் சிரமம். 10,000 வெள்ளி வரை மானியம் வழங்குவது பெரிய உதவி.

ஐக்கிய இந்திய முஸ்லீம் சங்கத்தின் தலைவர் திரு. ஃபரீஹூல்லாஹ் கூறினார்.

பொருள் சேவை வரி

பொருள், சேவை வரி உயர்வு ஒத்திவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து 8 விழுக்காட்டுக்கு அதிகரிக்கவிருக்கிறது.

அதற்கு அடுத்த ஆண்டு அது 9 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும்.

பொருள் சேவை வரியை ஒத்திவைப்பது குறித்த சபையின் பரிந்துரைக்கு இணங்கும் வகையில், வரவுசெலவுத் திட்டத்தில் அந்த அறிவிப்பு வந்தது இன்னொரு சிறப்பு அம்சம் என்று அவர் தெரிவித்தார்.

பொருள் சேவை வரி அதிகரிக்கவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பிலேயே வர்த்தகங்கள் பல சிரமத்துக்கு உள்ளாயின. அது ஒத்திவைக்கப்படும் என்ற செய்தி ஆறுதலாக அமையும்.

என்று டாக்டர் சந்துரு சொன்னார்.

கடன் திட்டம்

வர்த்தகங்களுக்கு உதவி வழங்கத் தற்காலிக இணைப்புக் கடன் திட்டம் (Temporary Bridging Loan Program), மேம்பட்ட வர்த்தகக் கடன் திட்டம் போன்றவற்றுக்கான கால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகக் கடன் தேவைப்படும் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அது அமைந்துள்ளதாக டாக்டர் சந்துரு கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்