Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலேசியா செல்லும் பேருந்துகளுக்கான முன்பதிவு மும்முடங்கு உயர்ந்துள்ளது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவுக்குத் தினசரி செல்லும் சொகுசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பே பயணிகள் முன்பதிவு செய்துகொள்கின்றனர்.

அண்மையில் 4 பெரிய பேருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் சிறிய நிறுவனங்கள் பயனடைகின்றன.

விசாக தினம், ஜூன் பள்ளி விடுமுறை ஆகியவற்றுக்கு முன்னதாகவே உரிம விதிமுறைகளை மீறியதற்காக 4 சிங்கப்பூர் சுற்றுப்பயணப் பேருந்து நிறுவனங்கள் மலேசியாவில் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது.

விரைவுப் பேருந்துச் சேவைகளை வழங்கிய அந்த நிறுவனங்கள் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை விற்றன.

ஆனால் அவ்வாறு செய்வதற்கு அந்நிறுவனங்கள் மலேசியாவில் பதிந்து கொள்ளவில்லை.

அதனால் சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வோர் மாற்று வழிகளை நாடுகின்றனர். அதனால் சிறிய பேருந்து நிறுவனங்கள் பலனடைகின்றன.

பெரும்பாலோர் ஒரு வாரத்திற்கு முன்பே பயணத்தைத் திட்டமிடுகின்றனர்.

தேவையை ஈடுகட்ட நிறுவனங்கள் அவற்றின் பேருந்துகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்கின்றன.

நெரிசலைக் குறைத்து தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்த
Causeway Link போன்ற பெரிய நிறுவனங்கள் நிலவரத்தைக் கூர்ந்து கவனிக்கின்றன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்