Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும்"

வாசிப்புநேரம் -

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்பு நடைமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றை மேம்படுத்தத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு மறுவுறுதிப்படுத்தியுள்ளது.

StartSAFE திட்டத்தின் வாயிலாகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சு சொன்னது.

சோதனைகளின்போது கண்டறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் எளிதில் தீர்க்கப்படக்கூடியவை என்று அமைச்சு சொன்னது.

Facebook பதிவொன்றில் அது தெரிவிக்கப்பட்டது.

சோதனைகளை வலுப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பைக் கடைப்பிடிக்கத் தவறிய நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்திருப்பதகாவும் அமைச்சு குறிப்பிட்டது.

ஜனவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 83 வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு சொன்னது.

நிறுவனங்களுக்குத் தொடர் ஆதரவு வழங்க அமைச்சு தயாராய் இருப்பதாக மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.

StartSAFE திட்டத்தின்மூலம் அந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்