Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

MRT நிலைய நடைமேடைக் கதவை மூடவிடாமல் தடுத்த ஆடவர்....SMRT காவல்துறையில் புகார்

வாசிப்புநேரம் -
MRT நிலைய நடைமேடைக் கதவை மூடவிடாமல் தடுத்த ஆடவர்....SMRT காவல்துறையில் புகார்

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Unfair-Bike/Reddit)

MRT நிலையத்திலுள்ள நடைமேடைத் திரைக்கதவை ஆடவர் ஒருவர் வேண்டுமென்றே மூடவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பில் SMRT காவல்துறையில் புகாரளித்துள்ளது.

சம்பவம் பிப்ரவரி 28ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) MRT நிலையத்தில் நடந்தது.
SMRT தலைவர் லம் சியூவ் காய் (Lam Sheau Kai) TODAY இடம் அதனைத் தெரிவித்தார்.

சம்பவத்தைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார். அச்செயல் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆபத்து விளைவிப்பது மட்டுமல்லாமல் மற்ற பயணிகளையும் பாதிக்கலாம் என்றார் அவர்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில் கதவுகளை மூடும்போது அதனை யாரும் இடைமறிக்கக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

சம்பவம் குறித்து SMRT காவல்துறையிடம் புகாரளித்தது.

Reddit சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அந்தக் காணொளியைப் பார்க்கும்போது அது ஓர் இளையர் எனத் தெரிகிறது.

காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாகவும் அவர் கூறுகிறார்.

ஒரு நிமிடத் தாமதத்திற்குப் பிறகு SMRT பணியாளர்கள் பாதிக்கப்பட்ட கதவுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து தீர்வு கண்டனர். அதன்பிறகே ரயில் நகரத் தொடங்கியது.

அவசர சூழ்நிலை தவிர்த்து நடைமேடை திரைக் கதவையோ ரயில் கதவையோ யாரும் இடைமறிக்கக் கூடாது என்பது விதிமுறை.

விதிமீறல் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்