Skip to main content
ரயில் தண்டவாளத்தில் எடுக்கப்பட்ட காணொளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ரயில் தண்டவாளத்தில் எடுக்கப்பட்ட காணொளி - காவல்துறையிடம் SMRT புகார்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ரயில் தண்டவாளத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி குறித்து SMRT நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

காணொளி 'Complaint Singapore' Facebook பக்கத்தில் பகிரப்பட்டது.

அது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

சிமெய் ரயில் நிலையத்திற்கும் தானா மேரா ரயில் நிலையத்திற்கும் இடையிலான தண்டவாளத்தில் காணொளி எடுக்கப்பட்டதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

அதனை எடுத்தவர் ரயிலை நெருங்கிக்கொண்டிருப்பதையும் தண்டவாளத்தைக் கடப்பதையும் காணொளியில் பார்க்கலாம். இன்னொருவர் அதற்கு உடந்தையாக இருப்பதையும் பார்க்கலாம்.

காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை என 8 World செய்தித்தளம் தெரிவித்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்