Skip to main content
SMRT ரயில் நிறுவனம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

SMRT ரயில் நிறுவனம் - $12.8 மில்லியன் நிகர லாபம்

வாசிப்புநேரம் -
SMRT ரயில் நிறுவனம் - $12.8 மில்லியன் நிகர லாபம்

படம்: TODAY

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

SMRT ரயில் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 12.8 மில்லியன் வெள்ளி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இது அதற்கு முந்திய ஆண்டின் 6.9 மில்லியன் வெள்ளி லாபத்தை விடக் கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகம்.

முந்திய நிதியாண்டில் ஆறு நாட்கள் நீடித்த கிழக்கு-மேற்கு ரயில் பாதை சேவைத் தடை மற்றும் அது தொடர்பான செலவுகள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

நிறுவனத்தின் வருவாய் 5.6 விழுக்காடு உயர்ந்து ஏறக்குறைய 980 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.

பயணிகள் எண்ணிக்கையும் கட்டண வருவாயும் உயர்ந்தது இதற்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

SMRT நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த Smart Station அதாவது அறிவார்ந்த ரயில் நிலைய அமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தைச் சோதிக்க மரினா பே ரயில் நிலையத்தின் மெய்நிகர் மாதிரியைப் பயன்படுத்துகிறது.

இது ஊழியர்கள் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் என்று நிறுவனம் தெரிவித்தது.

சம்பவங்களை விரைவாகக் கையாளவும் வழக்கமான நிலையச் செயல்பாடுகளைத் தானியக்கமாக்கவும் இது உதவும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட SMRT-குவாங்சோ ரயில் புத்தாக்க ஆய்வுக்கூடத்தின் கீழ் உள்ள மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்று.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்