Skip to main content
"சமூக ஊடகத்தடை பிரச்சினையைத் தீர்க்காது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சமூக ஊடகத்தடை பிரச்சினையைத் தீர்க்காது"

வாசிப்புநேரம் -
"சமூக ஊடகத்தடை பிரச்சினையைத் தீர்க்காது"
(படம்: REUTERS/Hollie Adams/Illustration)
சிங்கப்பூரில் சிறு பிள்ளைகளுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடுகள், சமூக ஊடகத் தடையைவிட மிகவும் கடுமையானவை என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் அணுகுமுறை வேறு.

எவ்வளவு காலமானாலும், தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அதையெல்லாம் தாங்கக்கூடிய செயல்திறன் மிக்க அணுகுமுறையை விரும்புவதாகத் திருவாட்டி ரஹாயு கூறினார்.

சமூக ஊடகத்தின் சில அம்சங்கள் இளையர்களைப் பாதிக்கின்றன. அவற்றைக் கையாள்வதே அமைச்சின் நோக்கம் என்றார் அவர்.

சமூக ஊடகப் பயன்பாட்டில் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவை குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

உள்ளடக்கத்தைத் தாண்டி, இளையர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வடிவமைப்பு அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.

ஒட்டுமொத்தத் தடை பிரச்சினையைத் தீர்க்காது என்றார் திருவாட்டி ரஹாயு.

ஆனால் சமூக ஊடகத் தடையை அமைச்சு தொடர்ந்து கருத்தில்கொள்ளும் என்றும் பிள்ளைகளைப் பாதுகாக்க ஆன அனைத்தும் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்