Skip to main content
சமூக ஆதரவுத் திட்டங்களுக்கான தகுதி வரம்பில் மாற்றம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சமூக ஆதரவுத் திட்டங்களுக்கான தகுதி வரம்பில் மாற்றம்

வாசிப்புநேரம் -

சமூக ஆதரவுத் திட்டங்களைப் பெறுவதற்கான வருடாந்திரச் சொத்து மதிப்பு வரம்பு அடுத்த ஆண்டு உயர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. 

ஒரு சொத்தை ஓராண்டுக்கு வாடகைக்கு விட்டால் எவ்வளவு வருமானம் வருகிறதோ அதுவே அதன் வருடாந்திர மதிப்பாகும். சந்தை நிலவரத்தைப் பொறுத்து அது மாறும். 

பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுத் திட்டம், MediShield Life கட்டணக் கழிவு, வேலைநலன் துணை வருமானத் திட்டம் போன்ற சமூக ஆதரவு உதவித் திட்டங்களுக்குத் தகுதி பெறுவது, வருடாந்திரச் சொத்து மதிப்பு வரம்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

அதில் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையின் வரம்பு 21,000 வெள்ளியாகத் தொடர்ந்து இருக்கும். 

இரண்டாம் நிலை வரம்பு, தற்போது  21,000 வெள்ளியிலிருந்து 25,000 வெள்ளி வரை உள்ளது. 

அடுத்த ஆண்டு அது 21,000 வெள்ளியிலிருந்து 31,000 வெள்ளி வரை என்று மாற்றப்படும். 

நிதியமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது. 

முதல் நிலை வரம்பு அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுரிமையாளர்களுக்கும் பொருந்தும். 

ஒரு தனிநபர் அல்லது குடும்பத்துக்கு வழங்கப்படும் சமூக ஆதரவு உதவி, முந்தைய ஆண்டின்  வருடாந்திர சொத்து மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்