Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஒருவர் அன்றாடம் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு அதிகமாகவே உள்ளது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தேசிய அளவில் சராசரியாக ஒருவர் நாளொன்றுக்கு 3.6கிராம் சோடியம் (Sodium) உட்கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

அது சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு. 

நாளொன்றுக்கு இரண்டு கிராமுக்கும் குறைவான அளவில் சோடியம் உட்கொள்ள வேண்டும் என்பது உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. 

சிங்கப்பூரில் அன்றாடம் ஒருவர் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு, சோடியத்தின் கெடுதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்  ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது. 

அதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், அந்தப் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். 

வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் குறைவான சோடியம் கொண்ட மாற்றுப் பொருள்களை உபயோகிக்கும்படி சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது. 

சந்தையிலும் குறைந்த சோடியம் கொண்ட பெருவாரியான குழம்புகள், சாறுகள் கிடைப்பதைத் திரு ஓங் சுட்டினார். 

உணவுத் தயாரிப்பில் சோடியத்தின் அளவைக் குறைக்க வாரியம், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 

மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 

சோடியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களுக்கு வரி விதிப்பது, கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது ஆகியவற்றையும் சுகாதார அமைச்சு பரிசீலிக்கும் என்றார் அமைச்சர் ஓங். 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்