Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் சூரிய சக்தித் தகடுகளின் எண்ணிக்கை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் சூரிய சக்தித் தகடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 6,900 தனியார் வீடுகளில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டன.

அது 2020ஆம் ஆண்டைவிட 1,400 அதிகம்.

வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang), நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணம் இன்னும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்டவை காரணங்களாக இருக்கக்கூடும் என்று அவர் சொன்னார்.

கார் நிறுத்தும் இடங்கள், பாலங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தும் புத்தாக்க வழிகளை அரசு தொடர்ந்து ஆராயும் என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்