Skip to main content
மாணவர்கள் சிலருக்கு அதிகத் தூக்கம் கிடைத்துள்ளது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மாணவர்கள் சிலருக்கு அதிகத் தூக்கம் கிடைத்துள்ளது

வாசிப்புநேரம் -
மாணவர்கள் சிலருக்கு அதிகத் தூக்கம் கிடைத்துள்ளது
படம்: Envato Elements
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் மாணவர்கள் சிலர் கடந்த ஆண்டு சற்றுக் கூடுதல் நேரம் உறங்கியுள்ளனர்.

அந்த மாற்றம் தொடக்கநிலை ஐந்து, உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் காணப்பட்டது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு அவர்கள் பள்ளி நாள்களில் சராசரியாக கால் மணி நேரம் கூடுதலாக உறங்கினர்.

கல்வி அமைச்சின் அண்மைய ஆய்வின்படி அந்த மாணவர்கள் பள்ளிநாளில் சராசரியாக 7 மணிநேரம் உறங்குவதாகத் தெரியவந்துள்ளது.

கல்வி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையத் ஹருன் அல்ஹப்ஸி நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

11 வயதிலிருந்து 13 வயது வரையுள்ள மாணவர்கள் நாள்தோறும் 9 முதல் 11 மணிநேரம் வரை உறங்கவேண்டும்.

14 வயதிலிருந்து 17 வயதுடைய மாணவர்கள் தினமும் 8இலிருந்து 10 மணிநேரம் உறங்கவேண்டும் என்று சுகாதார அமைச்சின் HealthHub இணையப்பக்கம் பரிந்துரைக்கிறது.

ஆனால், தற்போது மாணவர்கள் அதைவிடக் குறைவாகவே உறங்குகின்றனர்.

மாணவர்களின் உறக்கத்தை மேம்படுத்த ஏற்கனவே பல நடவடிக்கைகள் நடப்பில் உள்ளதாக டாக்டர் சையத் ஹருன் தெரிவித்தார்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்கள் இரவு 10.30 மணிக்கு 'Sleep Mode' நிலைக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து அந்த நடைமுறை தொடர்கிறது.

பள்ளிகள் நல்ல உறக்கப் பழக்கங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்