Skip to main content
சூடுபிடிக்கும் 'சொற்களம்'!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சூடுபிடிக்கும் 'சொற்களம்'!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையிலான 'சொற்களம்' விவாதப் போட்டி மீண்டும் வந்துவிட்டது!
 
15ஆவது முறையாக நடைபெறும் போட்டியின் முதல் சுற்று இன்று (14 பிப்ரவரி). 30 உயர்நிலைப் பள்ளிகள்... பெண்டமியர் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Img 9479.jpg
Img 9463.jpg

அங்கிருந்து தகவல் அளித்த நிருபர் சவுரியம்மாள் ராயப்பன், மாணவர்களுக்கு ஆதரவளிக்க ஆசிரியர்களும் பெற்றோரும் கூடியுள்ளதாகச் சொன்னார்.

மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

.

இரண்டாம் சுற்று இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கும்.

காலிறுதிச் சுற்று அடுத்த மாதம் 14ஆம் தேதியும் அரையிறுதிச் சுற்று ஏப்ரல் 4ஆம் தேதியும் நடைபெறும்.

Img 9496.jpg
Img 9505.jpg

'சொற்களம்' விவாதப் போட்டியின் இறுதிச் சுற்று ஏப்ரல் 25ஆம் தேதி இடம்பெறும்.

போட்டிக்கு மக்கள் கழக நற்பணிப் பேரவை, மத்திய வட்டார இந்திய நற்பணிச் செயற்குழுக்கள் ஆகியவை  ஏற்பாடு செய்துள்ளன.

'சொற்களம்' இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்