முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOTA மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு
வாசிப்புநேரம் -
CNA
முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOTA மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் தடை, உணவு விநியோகத்துக்குத் தடங்கல் ஆகியவை நடந்தால் அவற்றை எப்படிச்
சமாளிக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காக நேற்று (18 பிப்ரவரி) SOTA மாணவர்களுக்கு முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட உணவு (Ready-to-eat) தரப்பட்டது.
அது Exercise SG Ready திட்டத்தின் ஓர் அங்கம்.
உணவைச் சாப்பிட்ட சுமார் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக CNA செய்தித்தளம் குறிப்பிட்டது.
முன்கூட்டியே சமைக்கப்பட்ட உணவை உண்ட பிறகு மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர் என்றும் அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் SOTAவின் துணைத் தலைவர் மின்னஞ்சல்வழி மாணவர்களுக்குத் தகவல்
அளித்தார்.
அந்த மின்னஞ்சலைப் பார்த்ததாக CNA ஊடகம் தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை மாணவர்கள் சாப்பிடாத உணவுப் பொட்டலங்களைப் பள்ளி திரும்பப் பெறும் என்றும் SOTAவின் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.