Skip to main content
'சொதி எக்ஸ்பிரஸ்' ரயில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

'சொதி எக்ஸ்பிரஸ்' ரயில் - பெயர்க் காரணம் என்ன?

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான ரயில் சேவையை மலாயாக் கூட்டரசு ரயில்வே 20ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வழங்கி வந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான ரயில் சேவையை மலாயாக் கூட்டரசு ரயில்வே 20ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வழங்கி வந்தது.

Related article image

1901ஆம் ஆண்டிலிருந்து 1948ஆம் ஆண்டு வரை செயல்பட்ட அந்த ரயில்வேயில் இலங்கைத் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் பணியாற்றினர்.

Related article image

சொதி, இடியாப்பம் போன்ற பாரம்பரிய யாழ்ப்பாணத் தமிழ் உணவுவகைகளை அந்த ரயில்வேயில் பணியாற்றிய மூத்த ஊழியரின் மனைவி தயாரிப்பார்.

அவை அடுக்குப் பாத்திரங்களில் (tiffin carrier) வைக்கப்பட்டு ரயில்வே பாதையில் பணியாற்றிய இளம் தமிழர்களுக்குப் பரிமாறப்படும்.

சொதி உணவுவகை பிரபலமாக இருந்ததால் அந்த ரயில் தடத்துக்கு அந்த அடைமொழி ஒட்டிக்கொண்டு 'சொதி எக்ஸ்பிரஸ்' என்று  வழங்கப்பட்டது.

'சொதி எக்ஸ்பிரஸ்' பற்றிய சுவையான தகவல்களை 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார் திருமதி. இந்திரா ஈஸ்வரன்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், ஒரு சமையல் கலை வல்லுநர்.

அவர் தாம் எழுதியுள்ள சமையல் கலைப் புத்தகத்தில், இந்த 'சொதி எக்ஸ்பிரஸ்' பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.


Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்