உலக அரசியல் பதற்றம் - தென்கிழக்காசியா பெரும் பாதிப்பு: அமைச்சர் கிரேஸ் ஃபூ
படம்: Singapore Institute of International Affairs
உலக அரசியல் பதற்றம், பருவநிலை மாற்றம் ஆகிய இரட்டைச் சவால்களால் தென்கிழக்காசியா பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்துள்ளார்.
அத்தகைய சூழல் பசுமை முயற்சிகள் நீண்டகால மீள்திறனுக்கு மிகவும் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் அனைத்துலக விவகார நிலையம் ஏற்பாடு செய்த 13ஆவது நீடித்து நிலைத்திருக்கும் உலக வளங்கள் மாநாட்டில் திருவாட்டி ஃபூ உரையாற்றினார்.
வட்டாரத்தின் வேளாண்மைத் துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
வேலைவாய்ப்பு, பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பிலும் அதன் தாக்கம் இருக்கும் என்றார் அவர்.
மத்திய கிழக்குப் போரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகத் தொடர் சிக்கல்களும் அதிகரித்துள்ளன.
அந்த விவகாரங்களைக் கையாள்வதற்கே தற்போது முன்னுரிமை கொடுக்கப்படுவதை திருவாட்டி ஃபூ சுட்டினார்.