உடற்குறையுள்ளோருக்கான அடிப்படைப் பராமரிப்புத் திட்டம் விரிவாக்கம்
வாசிப்புநேரம் -
இணையம்: nhghealth
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உடற்குறையுள்ளோருக்கான SPARk அடிப்படைப் பராமரிப்புத் திட்டம் இரண்டாவது பலதுறை மருந்தகத்திற்கு விரிவுபடுத்தப்படுகிறது.
கடந்த ஈராண்டாக அது தேசியச் சுகாதாரக் குழுமத்தின் அங் மோ கியோ பலதுறை மருந்தகத்தில் வழங்கப்பட்டது.
அறிவுத்திறன், தொடர்புத்திறன், மூளைவளர்ச்சி ஆகிய குறைபாடுகள் கொண்ட 85 பேர் SPARk திட்டத்தால் பயனடைந்தனர்.
நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் திட்டம் ஆதரவளிக்கிறது.
இந்த ஆண்டிறுதிக்குள் காத்திப் பலதுறை மருந்தகத்திலும் திட்டம் கொண்டுவரப்படும்.
குடும்பநல மருத்துவர்கள், பராமரிப்பு நிர்வாகிகள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் சேவை வழங்குவர்.
உடற்குறையுள்ளோருக்கென சுகாதாரப் பரிசோதனை, நாள்பட்ட நோய்ப் பராமரிப்பு போன்ற சேவைகள் வழங்கப்படும்.
பராமரிப்பாளர்கள் சுகாதார ஆதரவுடன் நீண்டகாலப் பராமரிப்புத் திட்டத்துக்கான உதவியும் பெறுவர்.
திட்டம் கூடுதல் இடங்களில் வழங்கப்படுவதால் உடற்குறையுள்ள சுமார் 400 பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi