Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"மக்கள் மாற்றுக் கருத்துகளை விரும்புகின்றனர்; நாட்டை வழிநடத்த வலுவான அணியைத் தேர்வு செய்துள்ளனர்" - அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -
"மக்கள் மாற்றுக் கருத்துகளை விரும்புகின்றனர்; நாட்டை வழிநடத்த வலுவான அணியைத் தேர்வு செய்துள்ளனர்" - அதிபர் தர்மன்

(படம்: CNA/Syamil Sapari)

சிங்கப்பூரர்கள் சவால்மிக்க பொருளாதார எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்கள் தொடர்ந்து கல்வி, திறன்பயிற்சி, வாழ்நாள் கற்றல் ஆகியவற்றில் முதலீடு செய்யவேண்டும் என்றார் அவர்.

அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

வருங்காலச் சவால்களை எதிர்கொள்ள மக்கள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமெனத் திரு தர்மன் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மிக முக்கியமான பொதுத் தேர்தல் இடம்பெற்றிருப்பதை அவர் சுட்டினார்.

மக்கள் நாடாளுமன்றத்தில் மாற்றுக் கருத்துகளை விரும்பினாலும், நாட்டை வழிநடத்துவதற்கு வலுவான அணியைத் தேர்வு செய்திருப்பதாகத் திரு தர்மன் சொன்னார்.

தேச வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கான ஆயத்தப்பணி தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்கள் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்ட பொறுப்பை நினைவில் வைத்துச் செயல்பட வேண்டும் என்றார் அதிபர்.

பிரதமர் லாரன்ஸ் வோங், அவரது அணியினர் மீது முழுநம்பிக்கை கொண்டுள்ளதாகத் திரு தர்மன் குறிப்பிட்டர்.

அதிபராக அவர்களுடன் பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாகக் கூறிய கூறிய திரு தர்மன், அரசியலமைப்பை நிலைநாட்டவும் அனைத்துச் சிங்கப்பூரர்களின் நலனைக் கட்டிக்காக்கவும் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்