'தமிழோடு விளையாடு' - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் பள்ளிகள் எவை?
வாசிப்புநேரம் -
(படம்: கீர்த்தி)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 6 பள்ளிகள் தகுதிபெற்றன.
அவை அங் மோ கியோ தொடக்கப்பள்ளி, புக்கிட் வியூ (Bukit View) தொடக்கப்பள்ளி, நன் சியாவ் (Nan Chiau) தொடக்கப்பள்ளி, செம்பவாங் தொடக்கப்பள்ளி, வெல்லிங்டன் (Wellington) தொடக்கப்பள்ளி, உட்லண்ட்ஸ் ரிங் தொடக்கப்பள்ளி.
அடுத்த மாதம் 8ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தின் அரங்கில் இடம்பெறவிருக்கும் இறுதிச்சுற்றில் 6 பள்ளிகளும் போட்டியிடும்.
இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் மொத்தம் 20 பள்ளிகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு குழுவிலும் 4 மாணவர்கள் இருந்தனர்.
போட்டியின் நான்கு சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
சொல்வதெழுதுதல், குறுக்கெழுத்துப் புதிர், கலைந்த சொற்களைக் கண்டுபிடி, இணைச்சொல் - எதிர்ச்சொல் ஆகிய அங்கங்களில் மாணவர்கள் போட்டியிட்டதாகச் 'செய்தி' ஏற்பாட்டுக்குழுவின் அபிடா பேகம் கூறினார்.
முதல் முறையாக அரையிறுதிச் சுற்றில் கலந்துகொண்ட மாணவர்கள், மிகவும் உற்சாகமான அனுபவமாய் இருந்ததாகக் கூறினர்.

ஆதாரம் : Mediacorp Seithi